என் படத்த பொண்ணுங்களா பாத்தாங்க! வெளுத்து வாங்கிய நடிகை ஷகிலா..

samantha shakila pushpa tamilactress OoSolriya
By Edward Dec 17, 2021 12:00 PM GMT
Report

தென்னிந்திய முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களிலும் விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்துக்கு பின் நடிகை அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இரட்டை வசனங்களை வைத்து எழுதியிருக்கும் இப்பாடலுக்கு ஆண்கள் பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து புகாரளித்துள்ளது.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கவர்ச்சி புயல் நடிகை ஷகிலா சமந்தாவிற்கு ஆதரவாக கொதித்தெழுந்து பேசியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சமந்தாவின் அந்த பாடல் பற்றிய கருத்தினை கூறியுள்ளார். என் படத்தினை பெண்களா பார்த்தார்கள்? ஆண்கள் தானே பார்த்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

மேலும் படத்தில் வேலை செய்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் உட்பட பலர் ஆண்களாக தான் இருக்கிறார்கள். அப்படி எங்கு தான் உங்களுக்கு வலிக்கிறது. பெண்களை பற்றி புகழ்ந்தவர்களை போல் பெண்களை இழிவுப்படுத்தி பாடல் எழுதியும் இருக்கிறார்கள்.

அதற்கு நாங்கள் எங்கேயாவது பிரச்சனை செய்தோமா என்று கேள்விகளை வரிசை கட்டியுள்ளார். எல்லாரும் விவேகானந்தர் என்று கூறி சத்தியம் செய்யுங்கள். அப்படத்தின் நடிகரைத்தான் அப்படியான அர்த்தம் வைத்து பாடியுள்ளனர்.

ஏதாவது ஒரு பிரச்சனை செய்யலாம் என்று வருவீர்களா. இப்போதான் அந்த பொண்ணு (சமந்தா) விவாகரத்தில் இருந்து வெளியே வந்து ஏதோ ஒன்னு செய்து கொண்டிருக்கிறது என்று கோபமாக பேசியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..