நான் தவறு செய்துவிட்டேன்! கணவர் செய்த லீலையால் புலம்பும் விஜய்பட நடிகை..
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போதுவரை கொடிக்கடி பறக்கும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷில்பா செட்டி. 44 வயதான ஷில்பா செட்டி தன் கணவர் ராஜ் குந்த்ரா நடிகைகளை வைத்து தவறாக வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு பல லட்சம் சம்பாத்துள்ளார் என்று போலிசார் கைது செய்யப்பட்டனர். பல இளம் நடிகைகள் அவர் பற்றி புகாரளித்து பாலிவுட் சினிமாவையே அதிரவைத்தனர்.
இந்த செயலால் தனக்கு இதுபற்றி தெரியாது என்றும் தன்னை பற்றி கேவளமாக பேசிய ஊடங்கங்கள் மீது வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், கைதான கணவர் ராஜ் குந்த்ராவை கண்டுகொள்ளப்போவதில்லை எல்லாம் இருந்தும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கணவரை திட்டியுள்ளார் என்றும் கூறியிருந்தார். தற்போது மிஸ்டேக் என்ற ஒரு அறிக்கையில், தான் தவறு செய்துவிட்டேன்.
தவறுகள் செய்யாமல் வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்காது தவறுகள் பிறரை காயப்படுத்தும் தவறுகளாக இருக்காது என்று எண்ணினாலும் அது தவறுகளாகவே இருக்கும். நாம் செய்யும் தவறுகள் நமக்கு ஒரு பாடமாக அமையும் அதுவே நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் என்றும், நான் தவறு செய்துவிட்டேன், தன்னை தானே மன்னித்து கொள்கிறேன் இதிலிருந்து சில வற்றை கற்றுகொள்கிறேன் என்று ஆதங்கமாக புலம்பியுள்ளார் நடிகை ஷில்பா செட்டி.
