அவசர அவசரமாக எண்ட்ரியாக போகும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்!! யாரு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், நந்தினி மனதளவில் என்னால் இருக்க முடியாது என்று வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 12 ஆவது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் அப்சரா சிஜே தான் எவிக்ட்டாகி வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 2 நாட்களிலேயே சர்ச்சை ஆரம்பித்துவிடும். ஆனால் இந்ஹ சீசனில் இதுபோன்ற சர்ச்சைகள் எதுவும் இல்லாமல், விறுவிறுப்பின்றி மந்தமாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதே நிலை நீடித்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி அதளபாதாளத்திற்கு செல்லும் என்றும் கூறி வருகிறார்கள். அதனால் பிக்பாஸ் குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்களாம்.
வைல்ட் கார்ட்
கடந்த சீசன் 7ல் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே சென்ற அர்ச்சனா டைட்டில் வின்னாரானார். அந்தவகையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளர் சீக்கிரமே உள்ளே செல்லவுள்ளார்களாம். அதன்படி இந்த சீசனில் 3வது வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது.
வைல்ட் கார்ட் போட்டியாளராக பிரபல நட்சத்திர ஜோடியான பிரஜன் மற்றும் சாண்ட்ரா உள்ளே செல்லவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரஜன் - சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், அதுமட்டுமில்லாமல் இருவரும் இணைந்து சீரியலில் நடித்தும் இருக்கிறார்கள்.
ஒரு தம்பதியினர் வீட்டிற்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.