சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் 2005ல் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஜெய் சிரஞ்சீவா என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சர்ம்மா. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.
இப்படத்தில் ஸ்ரேயா சர்மாவின் க்யூட்டான நடிப்பால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
இதனை தொடர்ந்து இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். ஸ்ரேயா சர்மாவின் 17 வயதில் காயகுடு என்ற தெலுங்கு படத்தில் கதாநாயாகியாக நடித்து அறிமுகமாகினார்.
அப்படம் சரியான வரவேற்பை பெறாததால், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார்.
26 வயதாகும் ஸ்ரேயா சர்மா கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை எப்போவாது பகிர்ந்து வருவார்.
தற்போது குட்டையாடையில் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். அவரின் புகைப்படத்தை பார்த்து குட்டி ஐசுவா இது என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


