நடிகை சிம்ரனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா! அவரே கூறியுள்ளார் பாருங்க

Simran Actress
By Karthick Raja Jun 10, 2025 03:30 AM GMT
Report

90ஸ் கிடஸின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பேட்டிகள் அளித்து வரும் நடிகை சிம்ரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது உண்மையான பெயர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை சிம்ரனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா! அவரே கூறியுள்ளார் பாருங்க | Actress Simran Talk About Her Real Name

தனது உண்மையான பெயர் குறித்து பேசிய சிம்ரன், "என் உண்மையான பெயர் 'ரிஷிபாலா'தான். இப்பவும் என் பாஸ்போர்ட்டில் அந்த பெயர்தான் இருக்கு. ஆனால், ரிஷி என்கிற பெயர் ஆண் பெயர் போல இருக்கிறது என்று சொல்லி, இயக்குநர் சாவென் குமார் டக்தான் என் பெயரை மாற்றினார்.

சொல்லப்போனால், என் பெயரையே எனக்கு முதலில் உச்சரிக்க தெரியவில்லை. 'சிம்ரன்’ பஞ்சாபி பெயர் ஆகும். நானும் பஞ்சாபிதான். ஆனால், எனக்கு பஞ்சாபி வராது. பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பைதான்" என கூறியுள்ளார்.