என் நடத்தையை பத்தி ஒரு அறைக்குள்!!பத்திரிக்கையாளர்களிடம் கத்திய நடிகை சினேகா..
90-ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் புன்னகை அரசியாகவும் ஜொலித்து வந்த நடிகை சினேகா தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். நடிகர் விஜய்யின் 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை சினேகா கதாநாயகியாக நடிக்கவும் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உங்களின் உண்மையான பெயர் சுகாசினி. சினேகா என்ற பெயரில் வலம் வந்ததால் சாதாரண பெண் சிகாசினியாக, சினேகாவை பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா? அதை எப்படி எதிர்கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகை சினேகா, என்னை பற்றி பல கிசுகிசுக்கள் வந்துவிட்டது. இனிமேல் என்னை பற்றி இப்படித்தான் எழுத வேண்டும் என்று யோசித்தால் தான் முடியும். அந்தளவிற்கு என்னை பற்றி ஒற்றை கிசுகிசுக்கள் வந்ததது. ஆனால் ஆரம்பத்தில் என்னை கடுமையாக பாதித்தது. என் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என்று எல்லாம் பாதித்தது.
ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு என்னை பற்றி தெரியாமலே பத்திரிக்கையில் ஒரு பக்கத்தை நிரப்பவும் சுவாரஷ்யமாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் ஒரு தனிப்பட்ட நபரை நடிகை என்ற ஒரே காரணத்தால் எந்த ஆதாரமும் இல்லாமல் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் அவகையில் எழுதுகிறார்கள்.
இதுபற்றி ஒரு பத்திரிக்கையாளரிடம், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி நான் கிசுகிசு எழுதி, உங்கள் மனைவிக்கும் உங்கள் குழந்தைக்கும் அதை கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? என்று கேள்வியை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை.
ஆரம்பகாலத்தில் இப்படியான பிரச்சனையை எதிர்கொண்டும் போகபோக நான் கண்டுகொள்ளாமல் வேலையில் பிஸியாகிவிட்டேன் என்று நடிகை சினேகா கூறியிருக்கிறார்.
சமீபத்தில் கூட சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் பிரசன்னாவுடம் ரொமான்ஸ் செய்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை சினேகா.