விஜய் இப்படிப்பட்டவரா.. அப்போ இப்படி தான் இருப்பார்!! பிரபல நடிகை ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரின் பல படங்களில் விஜய் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். தற்போது தன்னுடைய கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் முழு நேர வேலையாக பார்க்கவும் இருக்கிறார்.
அதற்காக பல வேலைகளை பார்த்து வரும் விஜய் கமிட்டாகி படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி அரசியலிலும் ஈடவிருக்கிறார். இந்நிலையில் பிரபலங்கள் விஜய் பற்றிய கருத்துக்களை பகிர்வது போல் நடிகை சினேகாவும் அவரை பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் ஜோடியாகவும் நடித்து வரும் சினேகா, அவருடன் வசீகரா படத்தில் நடித்த போது விஜய்யுடன் நடித்தது பற்றியும் ஷூட்டிங்கில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை பற்றிய கூறியுள்ளார்.
விஜய் எப்போது அமைதியாக மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் மனிதராக இருப்பார் என்றும் காமெடி காட்சிகளில் சகஜமாக நடித்து முடித்துவிட்டு அதன்பின் அமைதியாகிவிடுவார் என்றும் கூறியுள்ளார். கேமெரா ஆக்ஷன் என்று கூறியதும் வேறு மாதிரியும் அதன்பின் அப்படியே அமைதியான விஜய்யாக மாறிவிடுவார் என்று கூறியிருக்கிறார்.