பப்ளிசிட்டிக்காக நடிகை சோனா அதை செய்கிறார்.. தயாரிப்பாளர்
நடிகை சோனா, சில நாட்களாக பெப்சி யூனியன் முன் திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் இயக்கி தயாரிக்கும் ஸ்மோக் என்ற வெப் தொடரின் ஹார்ட் டிஸ்க்கை அவரது மேனேஜர் கைப்பற்றி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை சோனா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாலாஜி பிரபு
சோனா தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார். சினிமாவில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதையெல்லாம் தாண்டிதானே போகணும், நயன் தாரா அசால்ட்டா பிரச்சனைகளை டீ பண்றாங்களே. அத்துடன் புதுபுதுசா பிரச்சனைகளையே கிரியேட் பண்றாங்க இல்லையா?. தற்போது சோனா சொந்தப்படம் எடுத்துள்ளார். பணத்தை போட்டு இருக்கிறார். ஆனால் அந்த படத்தின் மேனேஜர் கண்டண்ட் இருக்கும் ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுள்ளார்.
அதை ஏன் அவர் எடுத்து சென்றார்? சும்மா இருப்பவர்களின் ஹார்ட் டிஸ்க்கை யாரும் எடுத்துச்செல்ல முடியாது. மெனேஜர் - சோனாவுக்கும் இடையே என்ன தகறாறு என்பதை பார்க்கவேண்டும். அதுதெரியாமல் இதைப்பற்றி பேச முடியாது. கண்டன்ட் உள்ள ஹார்ட் டிஸ்க்கை மேனேஜர் எடுத்துச்செல்கிறார் என்றால் ஒரு தயாரிப்பாளராக அதை கண்டிக்க வேண்டும்..தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட யாருக்காவது பட நிறுவனத்துடன் பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த ஹூட்டிங்கை நிறுத்துவது தவறானது.
தயாரிப்பாளரை தாண்டி ஒரு மேனேஜர் ஹார்ட் டிஸ்க் எடுத்துச் செல்வது அதைவிட தவறானது. ஹார்ட் டிஸ்க்கை தூக்கி சென்றதில் உண்மை இருக்குமானால் அது கண்டுக்கத்தக்கது. ஆனால் பெப்சி முன்பு சோனா ஏன் தர்ணா இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.
புரொடக்ஷன் மேனேஜர் மீது தவறு என்றால் அதற்காக உள்ள சங்கத்தில் சென்று புகார் தந்திருக்க வேண்டும் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரலாம்.. இதையெல்லாம் மீறி தர்ணா போராட்டம் ஏன் செய்கிறார் என்றால் ஒரு சோசியல் அட்ராக்ஷன் சோனாவுக்கு தேவைப்படுகிறது.