திருமணம் செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா

Viral Photos Actress Sreeleela
By Bhavya Apr 28, 2025 02:30 PM GMT
Report

 ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா | Actress Sreeleela Adopted A Kid

ஏற்கனவே இரண்டு குழந்தைகளை வளர்த்து வரும் ஸ்ரீலீலா தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக அவரது இன்ஸ்டா தளத்தில் அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

தற்போது, இந்த நடிகையின் செயலை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.