பாலிவுட் நடிகருடன் காதல்.. இணையத்தில் தீயாய் பரவும் நடிகை ஸ்ரீலீலா போட்டோ
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
ஆம், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீலீலா பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் என்பவரை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
போட்டோ
இந்நிலையில், தற்போது கார்த்திக் ஆர்யன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஸ்ரீலீலாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தின் கீழ் 'நீ தான் என் உயிர்' என்று ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது இவர்கள் காதலை மறைமுகமாக கூறுகிறார்களா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.