சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா ஸ்ரீலீலா!! புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம்போட எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Samantha Allu Arjun Pushpa 2: The Rule Sreeleela
By Edward Nov 11, 2024 08:30 AM GMT
Report

புஷ்பா 2 

புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.

சுகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார். இவருடைய நடனம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா ஸ்ரீலீலா!! புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம்போட எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Actress Sreeleela Salary In Pushpa2 New Dance

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சமந்தா நடனமாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இப்படத்தில் இல்லை என தகவல் வெளிவந்தது.

ஸ்ரீலீலா சம்பளம்

அவருக்கு பதிலாக வேறு யார் நடனமாட போகிறார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா தான் சமந்தாவின் இடத்தை பிடித்துள்ளார் என நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா ஸ்ரீலீலா!! புஷ்பா 2 பாடலுக்கு ஆட்டம்போட எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Actress Sreeleela Salary In Pushpa2 New Dance

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் அந்த பாடலுக்கு ஆட்டம் போட நடிகை ஸ்ரீலீலா 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். ஏற்கனவே புஷ்பா 1 படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆட நடிகை சமந்தா 3 கோடி சம்பளமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.