நான் பண்ண பெரிய தப்பு..எவக்கூடவோ போயிட்டான்னு சொன்னாங்க!! நடிகை கேப்ரியல்லா ஓபன் டாக்..
நடிகை கேப்ரியல்லா
சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த 2024 இறுதியில் இந்த சீரியல் நிறைவடைந்ததை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
அதன்பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த கேப்ரியல்லா, கணவருடன் இணைந்து நடிப்பு கலையை கற்றுக்கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் இணைதள பக்கம் வந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கேப்ரியல்லா அளித்த பேட்டியொன்றில், தான் செய்த தவறு பற்றி பகிர்ந்துள்ளார்.
நான் பண்ண பெரிய தப்பு
அதில், நான் பண்ண பெரிய தப்பு, இப்போது நினைத்தாலும் அசிங்கமாக இருக்கு. எங்க அப்பா நடனத்துக்கு நோ சொல்லிட்டாரு. அதனால கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.
பின் சமாதானம் பண்ணி என்னை திரும்ப ஊருக்கு கூட்டிட்டு போனார்கள். அப்போது ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இவள் எவன்கூடயோ ஓடிப்போயிட்டா, கல்யாணமே பண்ணிட்டு இருப்பா அப்படி இப்படின்னு பேசி அசிங்கப்படுத்தினாங்க என்று கேப்ரியல்லா ஓபனாக பேசியிருக்கிறார்.