சினிமா வாழ்க்கை போச்சு!! காதலருடன் கல்யாணத்துக்கு ரெடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. இப்படத்தினை தொடர்ந்து காக்கி சட்டை படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு, மது பார்ட்டியில் எல்லைமீறிய போதையில் தள்ளி சென்ற தகவல் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.
இதனால் அவரது மார்க்கெட்டே இழக்க நேரிட்டு 5 வருடமாக வாய்ப்பில்லாமல் தவித்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புது மலர்ச்சியுடன் இருந்து வருகிறார். திருமணம் எப்போது? அப்படி நடந்தால் காதல் திருமணமா? பெரியவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி கேட்கபட்டது.
அதற்கு நடிகை ஸ்ரீதிவ்யா, என் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும் என்றும் நான் என் காதலனை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்.
நிச்சயம் விரைவில் உங்களுக்கு அறிவிப்பேன் என்றும் யார் அந்த காதலர் என்று கேட்டதற்கு நேரம் வரும் போது கண்டிப்பாக கூறுவேன் என்றும் ஓப்பனாக பதிலை கூறியிருக்கிறாராம்.