5 வருடமாக வாய்ப்பில்லாமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யாவா இது!! இப்போ என்ன செய்றாங்க தெரியுமா..
தெலுங்கு சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் ஜங்ஸன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீதிவ்யா. அதன்பின் மனசாரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய ஸ்ரீதிவ்யா, தமிழில் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
ஊத கலர் ரிப்பன் நடிகை என்ற பெயரெடுத்த ஸ்ரீதிவ்யா, ஜீவா, வெள்ளைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், மருது, காஸ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொர போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் பிரபலம் கொடுத்த பார்ட்டி ஒன்றில் தலைக்கேரிய போதையில் ஆட்டம் போட்டு தன் பெயரை கெடுத்துக்கொண்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இதனால் தான் கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் ஜன கன மன படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் ரைட் என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா தனது சொந்த ஊரில் செட்டிலாகிவிட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
தனது வீட்டில் எடுத்த செல்ஃபி மிரர் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போது இங்க நடிக்க வருவீங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

