கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்கவே மாட்டேன்!! நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த முடிவு..
நடிகை ஸ்ரீதிவ்யா
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துபின் Manasara என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஊதா கலரு நடிகை என்ற பெயரை பிடித்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா 2017க்கு பிம்ன் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சுமார் 5 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வெளியான Raid படத்தில் நடித்திருந்தார்.
கவர்ச்சி ரோல்
தற்போது மீண்டும் தன்னுடைய ரீஎண்ட்ரியை கொடுக்க மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, கவர்ச்சி ரோலில் நடிக்க கேட்டாலே ஓடிவிடுகிறாராம். கோடி ரூபாய் சம்பளம் பேசினாலும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா.