காதலை ஏற்க மறுத்த நடிகர் கார்த்திக்.. தற்கொலை செய்ய போன நடிகை - அது யார் தெரியுமா?
கார்த்திக்
திரைத்துறையில் நவரச நாயகன் என புகழப்படுபவர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு play boy என்று சினிமா வட்டாரங்களில் பலரும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர் கார்த்திக் பற்றி பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், "பல நடிகைகள் நடிகர் கார்த்திக் காதலில் விழுந்தார்கள். ஆனால் அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை.

தற்கொலை முயற்சி
நடிகையான ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புடுத்தினாராம். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அன்றைய காலத்தில் இதை பற்றி பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது.
அதம் பிறகு ஸ்ரீ பிரியா ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் " என வீடியோவில் கூறினார்.
