எல்லா சொத்தும் போச்சு, மகன், கணவர் என எல்லாரும் போயிட்டாங்க, நடிகைக்கு நடந்த கொடுமை

Actress
By Tony Apr 27, 2026 01:30 PM GMT
Report

சுதா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் சுதா. இவர் நாம் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருப்பதை பார்த்திருப்போம்.

இவர் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து அவர் பேசியது இணைய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இவர் கூறுகையில், நான் நன்றாக சம்பாதித்து, கையில் இருந்த மொத்த தொகையையும் போட்டு டெல்லியில் ஒரு ஹோட்டல் தொடங்கினேன்.

ஏமாற்றம்

ஆனால், தெரியாமல் போட்ட ஒரு கையெழுத்தால் என் ஒட்டு மொத்த சொத்துக்களும் பறிபோனது.

எல்லா சொத்தும் போச்சு, மகன், கணவர் என எல்லாரும் போயிட்டாங்க, நடிகைக்கு நடந்த கொடுமை | Actress Sudha Emotional Interview

அதோடு, என்னிடம் சண்டைபோட்டு விட்டு என் மகனும் வெளிநாடு சென்றுவிட்டார், கணவரும் என்னை விட்டு சென்று விட்டார்.

தற்போது நான் தனியாக தான் இருக்கிறேன், என மனம் நொந்து சுதா பேசியுள்ளார்.