அவள் என் மகளே இல்லை, மிகவும் வருத்தமாக உள்ளது.... சுகன்யா சோகம்
சுகன்யா
புது நாத்து புது நெல்லு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 80களில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா.
அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து செட்டில் ஆனார்.
ஆனால் அவரது திருமண வாழ்க்கை சில வருடத்திலேயே முடிவுக்கு வர மீண்டும் சினிமா பக்கம் வந்தவர் சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.
நடிகை, டப்பிங் கலைஞர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட சுகன்யாவின் மகள் இவர் என ஒரு புகைப்படம் வைரலானது.
அந்த புகைப்படம் குறித்து சுகன்யா ஒரு பேட்டியில், எனது மகள் என்று ஒரு போட்டோ வைரலாகிறது, ஆனால் அவர் எனது மகள் கிடையாது. அவர் எனது அக்காவின் மகள், சித்தியால் நான் பிரபலம் ஆகிவிட்டேன் என அவர் சந்தோஷமாக உள்ளார்.
ஏன் இப்படி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என தெரியவில்லை, வருத்தமாக இருக்கிறது என தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.