15 வருஷ அனுபவம்..காசும் கொடுக்கமாட்டேன்!! பிரபல சிங்கர் ஸ்வாகதா கிருஷ்ணன்..
ஸ்வாகதா கிருஷ்ணன்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி பிரபலமானவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். பிக்பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணனின் சகோதரியாக அறியப்படுவதற்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமாகினார்.
இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்து வரும் ஸ்வாகதா, திரைத்துறை அனுபவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், பெண்களுக்கு அவரவர் துறையில் அங்கீகாரம் கிடைத்ததா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
காசும் கொடுக்கமாட்டேன்
அதில், அப்படி எதுவும் கிடைக்கிறது இல்லை. நானே பல பிராஜெக்ட்டில் வேலை செய்தேன், மியூசிக் பிரடியூசராக பணியாற்றினேன். என்னை ஒரு பிராஜெக்ட்டில் கூட கிரெடிட் கொடுத்தது கிடையாது. அப்படி நான் எப்படி வேறுமாதிரி பதில் சொல்லவேண்டும், கிடையவே கிடையாது, எனென்றால் 15 வருஷம் அனுபவம்.
எத்தனை ஃப்ரீயா பாடியிருக்கேன். நம்ம வாய்ஸ் வரும், கிரெடிட் கூட வராது, பேமெண்ட் தரமாட்டாங்க. அந்த விஷயம் மாறுது, யாரு பேரு மாறுதுன்ணு கூட சொல்லமாட்டாங்க. இதுபற்றி கேட்கவோ, சண்டைப்போடவோ பிடிக்காது, அதன்பின் அவர்களுடன் வேலை செய்யமாட்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாடகி ஸ்வாகதா.