அது என் தனிப்பட்ட விசயம் சொல்லமுடியாது!! விவாகரத்து பற்றி பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்வாதி
ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுவாதி ரெட்டி.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார்.
சுவாதி ரெட்டி கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி தனது காதல் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம், ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரின் புகைப்படத்தை நீங்கியதால் இந்த மாதிரியான தகவல் பரவி வந்ததை அடுத்து சுவாதி ரெட்டி வாய்ந்திறந்திருக்கிறார்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் விவாகரத்து செய்து கொண்டது உண்மையா என்று பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்வாதி நான் ஏன் சொல்ல வேண்டும், என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றவர்களுக்கு விவாதிப்பதில்லை என்றும் நான் பின்பற்றும் விதிகளில் இதுவும் ஒன்று அதனால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று கூறி பத்திரிக்கையாளருக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
మీ ప్రశ్నకి సమాధానం నేను చెప్పను..సురేశ్ కొండేటికి స్వాతిరెడ్డి కౌంటర్..!!#SwathiReddy #MonthOfMadhu #SureshKondeti #NTVENT #NTVTelugu pic.twitter.com/7SMpVEZNJG
— NTV Telugu (@NtvTeluguLive) September 26, 2023