லுங்கி அணிந்து கவர்ச்சியில் வளம்வரும் நடிகை தமன்னா!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில் நடித்து இளசுகளை ஈர்த்தார்.
தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிவித்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தற்போது அரண்மனை 4 படம் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. அதன் பிரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அந்நிகழ்ச்சிக்கு நடிகை தமன்னா லுங்கி போல் இருக்கும் வித்தியமாசமான ஆடையில் கவர்ச்சி காட்டி வந்துள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






