ரஜினி, ஷாருக்-லாம் ஓரங்கட்டிய ஹீரோயின்!! 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

Sridevi Bollywood Indian Actress Tamil Actress
By Edward Feb 16, 2025 02:30 AM GMT
Report

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை. தமிழில் ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காது இடம்பெற்றார். அதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று அங்கையும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான். அப்படி டாப் இடத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக மாறினார்.

ரஜினி, ஷாருக்-லாம் ஓரங்கட்டிய ஹீரோயின்!! 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா? | Actress To Get Rs 1 Crore Salary In Indian Cinema

1 கோடி சம்பளம்

அப்படி சக நடிகர்களைவிட அதிக சம்பளம் வாங்கிய நடிகையாவும் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகையாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்தார் ஸ்ரீதேவி. ரஜினி, சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் போன்ற நடிகர்களையும் 1992 - 97 காலக்கட்டத்தில் பின்னுக்கு தள்ளினார் ஸ்ரீதேவி.