நாங்க அப்படி சொல்லியும் பராசக்தி 10-க்கு ரிலீஸ் செய்றாங்க..போட்டி இல்லை!! பிரபலம்..
ஜனநாயகன் - பராசக்தி
2025 பொங்கல் தினத்தன்று தமிழ் திரைத்துறையில் களைக்கட்டவிருக்கிறது. 9ஆம் தேதி ஜனநாயகன் படமும், 10 ஆம் தேதி பராசக்தி படமும் போதவுள்ளது. விஜய்யுடன், சிவகார்த்திகேயன் மோதவுள்ளதால் இரு ரசிகர்களிடையே கடுமையான வார்த்தை மோதல்கள் இணையத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

போட்டி இல்லை
அதில், ஜனநாயகன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருந்ததுதான். ஜனவரியில் ரிலீஸ் செய்தால் வியாபாரம் நன்றாக இருக்குமென நினைத்தார்கள். ஆனால் பராசக்தி படமோ பூஜை போடப்பட்ட நாளிலே பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் ஜனநாயகன் படமும் , பராசக்தியும் வருவது போட்டிக்காக செய்யவில்லை. பராசக்தியை பொறுத்தவரை நாங்கள்(திரையரங்க உரிமையாளர்கள்) அவர்களிடம், 14 ஆம் தேதி ரிலீஸ் செய்தால் ஆறில் இருந்து ஏழு நாட்கள் கேப் இருக்கிறது.

ஜனநாயகன் பெரிய ஹிட்டாகும் என்றுதான் ரிலீஸ் செய்கிறோம். இரு வாரங்கள் அப்படத்தைத்தான் திரையிடுவோம். நீங்கள் 26ஆம் தேதிக்கு வரவேண்டும் என்று சொன்னோம்.
அதற்கு அவர்களோ, நாங்கள் இந்த தேதியை பிளான் செய்துதான் வியாபாரம் எல்லாம் செய்துவிட்டோம். 10 ஆம் தேதியே வருகிறோம் என்று சொல்லித்தான் வந்தார்களே ஒழிய, நிச்சயம் போட்டிக்கு வரவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.