சில்க் ஸ்மிதாவுக்கு அவங்கள தான் பிடிக்கும்.. சீரியல் நடிகை ஈசன் சுஜாதா கொடுத்த தகவல்..
சில்க் ஸ்மிதா
80, 90களில் கிளாமர் குயினாக திகழ்ந்து கோடிக்கணக்கார ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வருவதுண்டு.
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான ஈசன் சுஜாதா, சில்க் ஸ்மிதா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஈசன் சுஜாதா
அதில், சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரை ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர்னு யாரையும் மதிக்கமாட்டார். ஆனால் லைட்மேன், காஃபி கொடுப்பவர்ன்னு சின்ன சின்ன தொழிலாளிகள் தான் அவர் நல்லா பேசுவார். ஏன்னா அந்தளவிற்கு அவர் பாதிக்கப்பட்டு இருந்தார்.
லைட் மேன், புரொடக்ஷன் பாய்னு சின்னசின்ன ஆளுங்களை எல்லாம் ஷெட்ல பார்க்கும்போது அவர்களுக்கு லெமன் ஜூஸ் கொடுன்னு பாசமா பழகுவாங்க. அதேபோல் பெரிய பெரிய ஆளுங்கலாம் வந்தா கால் மேல் கால் போட்டுத்தான் உட்காருவார். அதுக்கு காரணம் அவருக்கு அவர்களால் ஏற்பட்ட வலிதான் என்று ஈசன் சுஜாதா தெரிவித்துள்ளார்.