நடிகை திரிஷாவின் சமீபத்திய சம்பளம்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டஃப் கொடுப்பாங்களோ!
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்து அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் விஜய்,அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் தெலுங்கு நடிகர்களுடன் ஜோடிபோட்டு முன்னணி நடிகையாகியவர் நடிகை திரிஷா.
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த திரிஷா சில வருடங்களுக்கு முன் காதல், நிச்சயதார்த்தம் என தோல்வியில் முடிந்ததால் மன அழுத்ததில் படங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வந்தார். 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இவ்விரு படத்திற்கும் திரிஷா வாங்கிய சம்பளம் என்ன என்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளமாக வாங்கி வருகிறார். தற்போது மீண்டும் தன் இடத்தினை பிடித்துள்ள திரிஷா ஒரு படத்திற்கு 3 கோடிகளுக்கும் மேல் சம்பளமாக பேசி வருகிறாராம். சமீபத்தில் முன்னணி நடிகைகள் திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் சேர்ந்து பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலானது.