கூலி படம் பார்த்துட்டேன், எப்படியிருக்கு தெரியுமா? போட்டு உடைத்த அனிருத்

Rajinikanth Anirudh Ravichander Coolie
By Tony May 03, 2025 03:30 PM GMT
Report

கூலி விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் கூலி. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆவலுடன் காத்திருக்க, சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிருத் ஒரு சரவெடியை கொழுத்தி போட்டுள்ளார்.

ஆமாங்க, அந்த பேட்டியில் அனிருத் இனி எமோஜி எல்லாம் எக்ஸ் தளத்தில் போடப்போவது இல்லை, அப்படி போடுவதால் எனக்கே ஒரு ப்ரேஷர் வந்துவிடுகிறது.

கூலி படம் பார்த்துட்டேன், எப்படியிருக்கு தெரியுமா? போட்டு உடைத்த அனிருத் | Rajini Coolie Movie First Review

ஆனால், இப்போதே சொல்கிறேன், கூலி படம் முழுவதும் பார்த்துவிட்டேன், சூப்பராக வந்துள்ளது, ரஜினி சார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்க உள்ளீர்கள் என அனிருத் கூறியுள்ளார்.

பிறகு என்ன ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அந்த 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸும் கூலி வருகைக்கு காத்திருக்கிறது.