நாய்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால்...நடிகை திரிஷா காட்டம்..
திரிஷா
90-ஸ் காலக்கட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்தார் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து வந்து மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா, தன்னுடைய திறமையால் டாப் நடிகையாக மாறினார்.
இதற்கிடையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்த சமயத்தில் 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து மீண்டும் கேரியரை துவங்கினார். தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் திரிஷா, விஜய்யுடன் நெருக்கமாக இருப்பது குறித்து இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால்
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் படங்களில் நடித்து வரும் திரிஷா, சமீபகாலமாக பரபரப்பாக தன்னை பற்றி பேசுபவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில், 'மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். அப்படியானால் இதுதான் சுய பரிசோதனை செய்வதற்கான நேரம்' என்று ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். தற்போது இதனை கண்ட பலரும் சிலர் பேசும் வெறுப்பு பேச்சுக்களால் தான் திரிஷா இப்படியான ஒரு பதிவினை பகிர்ந்து வருகிறார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.