விஜய்யுடன் நடனமாட 5 கோடி.. கமலுடன் நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

Kamal Haasan Vijay Trisha Greatest of All Time
By Kathick Sep 16, 2024 11:00 PM GMT
Kathick

Kathick

Report

திரிஷா 

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா இணைந்து நடனமாடியது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மட்ட எனும் பாடலில் நடிகை திரிஷா நடனமாடி இருந்தார்.

இதுவரை எந்த ஒரு ஹீரோவின் படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடாத திரிஷா, முதல் முறையாக விஜய் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்திருந்தார். இந்த பாடலில் விஜய் மற்றும் திரிஷா இருவரின் நடனமும் பட்டையை கிளப்பியது.

விஜய்யுடன் நடனமாட 5 கோடி.. கமலுடன் நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Actress Trisha Remuneration For Dance And Acting

கில்லி படத்தில் வரும் நடனத்தை இந்த பாடலில் ரீ கிரியேட் செய்திருந்தனர். இது திரையரங்கையே அதிரவைத்தது. இந்த பாடலில் நடனமாடுவதற்காக நடிகை திரிஷா ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தக் லைஃப் சம்பளம்

திரிஷாவின் கைவசம் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கமல் ஹாசன் - சிம்பு இணைந்து நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒரே ஒரு பாடலில் நடனமாட ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருந்த திரிஷா, தக் லைஃப் படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

விஜய்யுடன் நடனமாட 5 கோடி.. கமலுடன் நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா | Actress Trisha Remuneration For Dance And Acting

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் நடிகையாகவும் திரிஷா தான் இருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.