நாலா பக்கமும் அடிச்சா எப்படி!! திரிஷா டெலீட் செய்த புகைப்படம்!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதகாலமாக சர்ச்சையாக பேசப்பட்டு வந்த விசயம் என்றால் அது மன்சூர் அலிகான் திரிஷாவை மோசமாக பேசியது தான். இந்த விசயம் குறித்து திரிஷா, மன்சூர் அலிகானை கண்டித்த நிலையில் பெரியளவில் வெடித்து பலர் ஆதரவாக பேசியதோடு, போலிஸ் வழக்கும் பதிந்தது.
ஒரு வழியாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, திரிஷாவும் அதற்கு மன்னிப்பு கொடுக்க அந்த விசயம் அமைதியாக திரிஷாவிடம் விளக்கமும் கேட்கப்பட்டது. திரிஷாவை பற்றி அப்படியே அமைதியாகி போன நிலையில், பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தினை பார்த்து ஒரு ரியாக்ஷன் போட்டுள்ளார் திரிஷா.
படத்தின் போஸ்டரை பகிர்ந்து அதில் CULT ப்பா...... என்ற ரியாக்ஷன் கொடுத்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், சைக்கோத்தனமான, ஆண் பேரினவாதம் மற்றும் பெண்கள் வெறுப்பு கருத்துக்களை கொண்ட அப்படத்தினை ஆஹா ஓஹோ என்று புகழும் திரிஷா மன்சூர் அலிகான் அப்படி பேசியது தவறு என்று கூறியது எப்படி என்று கடுமையான விமர்சனங்களை கூறிவந்தனர்.
இதை பொறுத்துக்கொள்ளாத திரிஷா அந்த
பதிவினை உடனே டெலீட் செய்திருக்கிறார். டெலீட்
செய்த பதிவினை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள்
திரிஷாவை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.