நயன்தாராவை பார்த்து ஏங்கும் பிரபல நடிகை.. விக்னேஷ் சிவனை போல் ஒரு துணை கிடைக்கனுமாம்..

Keerthy Suresh Nayanthara Vignesh Shivan
By Edward Oct 25, 2022 05:28 PM GMT
Report

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று கூறும் அளவிற்கு உச்சத்தி தொட்டு இருப்பவர் நடிகை நயன் தாரா கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன் தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரெசாட்டில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் ஒருவார தாய்லாந்து ஹனிமூன், ஜவான் ஷூட்டிங் என்று இருந்துவிட்டு பின் பிரான்ஸ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று இரண்டாம் ஹனிமூனை கொண்டாடி வந்தார்.

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு தன் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் வந்தனர் புது தம்பதியினர்.

இப்படி சென்று கொண்டிருக்கும் போது தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்றும் அது வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டோம் என்றும் கூறி புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.

இந்த சம்பவம் பெரியளவில் பேசு பொருளாக மாறி விமர்சனத்திற்குள்ளானது. இப்படி ஒரு பக்கம் இருக்க நேற்று தீபாவளி அன்று இரட்டை குழந்தைகளை கையில் பிடித்தபடி தல தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நயன் தாராவுக்கு எப்படி விக்னேஷ் சிவன் கிடைத்தாரோ அதேபோல் நமக்கும் ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும் என்று நினைத்து வருகிறாராம்.

ஏற்கனவே வீட்டில் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டு வந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு ஓகே என்று கூறியதுடன் இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்காகவும் பேசி இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்..

Gallery