ஜோதிகாவின் கோபத்தால் மொத்த காசையும் இழந்த நடிகை!! இப்படியொரு ரகசியம் இருக்கா?
திருமணமாகி சில நடிகைகள் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குட்டி என்று இருந்துவிடுவார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் தான் அதன்பின்பும் நடிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகியவர் தான் நடிகை ஜோதிகா.
அதன்பின், குழந்தைகள் வளர்ந்ததும் நடிப்பில் கவனம் செலுத்தி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மும்பையில் செட்டிலாகி ஒர்க்கவுட் செய்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
3 ரோசஸ்
இந்நிலையில் நடிகை ஜோதிகா வேறொரு நடிகையுடன் சண்டைப்போட்டு பிரச்சனை செய்ததால் ஒரு நடிகைக்கு கடனாளியது தான் மிச்சமாகிய விசயம் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை ஜோதிகா கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் இருந்தவர் தான் நடிகை ரம்பா. அப்போது தயாரிப்பில் கவனம் செலுத்த, ரம்பா சகோதரரை வைத்து 3 ரோசஸ் என்ற படத்தினை தயாரித்தார். அப்படத்தில் ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்திருந்தனர்.
ஜோதிகா - லைலா
பைனான்சியரிடமிருந்து கடன் வாங்கி அப்படத்தினை தயாரித்த ரம்பா, படத்தை முடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. அதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் இடையில் சண்டை வந்து ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடுத்துள்ளனர். இதனால் குறித்த நாளில் படத்தினை முடிக்காமல் போயுள்ளது. அதையெல்லாம் சரி செய்து ரம்பா படத்தை முடித்து ரிலீஸ் செய்திருக்கிறார். ஆனால் படமும் சரியாக ஓடாமல் மோசமான நஷ்டத்தை ரம்பாவிற்கு கொடுத்து கடனாளியானார்.
சூர்யா
அன்றிலிருந்து ரம்பா தமிழில் தலையே காட்டாமல் வேறு மொழிகளில் நடித்தும் 2010ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகியிருக்கிறார். 3 ரோசஸ் படத்தின் போது லைலா பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் வந்துள்ளார். சூர்யாவை காதலித்து வந்த சமயத்தில் லைலாவுடன் ஜோதிகா சண்டைப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.