20 கொலை செய்தவருடன் நடித்த நடிகை!! டிவிஸ்ட் கொடுத்த கேங்ஸ்டர்..
பாக்ய ஸ்ரீ
கடந்த 1969ல் அரச குடும்பத்தில் பிறந்து 1089ல் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகினார் நடிகை பாக்ய ஸ்ரீ. நடித்து முதல் படமே மிகப்பெரிய அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. சின்னத்திரை சிரீயல் மூலம் நடிகக்க ஆரம்பித்து மேனே பியார் கியா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையான வலம் வந்த பாக்யஸ்ரீ கேங்ஸ்டர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தார்.
20 கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கேங்ஸ்டருடன் நடித்துள்ளார் நடிகை பாக்யஸ்ரீ. அவர் அளித்த பேட்டியொன்றில், நான் நடித்த படங்களில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் என்னால் மறக்க முடியாது. நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் என் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இதனை மனதில் வைத்து தான் ஒவ்வொரு படத்திலும் கையெழுத்திடுவேன்.
என்னைத்தேடி வரும் வாய்ப்புகள் எனக்கு பிடிக்காமல் இருக்கும், நான் தெலுங்கு, கன்னடம், பெங்காலி படத்தில் நடித்திருக்கிறேன். ஒருமுறை நான் தெலுங்கு படத்தில் நிஜமான கேங்ஸ்டர் குற்றவாளியுடன் இணைந்து நடித்ஹேன். அது எனக்கு பயத்தை கொடுத்தது. அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி சிறையில் இருந்த குற்றவாளியை வெளியே அழைத்து ஷூட்டிங் நடத்தினோம்.
கேங்ஸ்டர்
நான் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் குற்றவாளிகளின் வாழ்வியல் குறித்த தகவல்களை சேமிப்பவராக நடித்தேன். 20 - 30 கொலைகளை செய்தவர் கேங்ஸ்டராக நிஜ குற்றவாளி நடிக்கிறார் என்று சொன்னதும் அதிர்ச்சியானேன். அவர் வரும் போது கழுத்தில் சில செயின்கள் அணிந்து, 10 பாடி கார்டுகளுடன் வந்தார்.
வந்ததும் என்னிடம், எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று சொன்ன அடுத்த நிமிடம் என் இதயமே நின்றுவிட்டதது. அந்த கேங்ஸ்டர் என்னிடம், ‘எனக்கு உங்களை போல சகோதரி இருக்கிறார். அவர் பார்ப்பதற்கு உங்களை போலவே இருப்பார்’ என்றார். இதைக் கேட்டதும் தான் எனக்கு மூச்சு வந்தது என்று கூறியிருக்கிறார் பாக்ய ஸ்ரீ.