338 கோடி அபராதம்! பிரபல தொலைக்காட்சி நடிகை செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்
பெரும்பாலும் பிரபலங்கள் வரம்பு மீறி சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி கட்ட தயங்குவார்கள். அதிலும் கோடிக்கணக்கில் வாங்கும் பணத்தை மறைத்து பொய்யான கணக்குகளை காட்டி மோசடி செய்வார்கள். அந்தவகையில் சீனாவில் பிரபல நடிகையும் தொலைக்காட்சி பிரபலமாக வளம் வருபவர் நடிகை ஜெய் ஹூவாங்.
2019 மற்றும் 2020 ஆண்டுகளின் தொலைக்காட்சி தொடர்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த ஓப்பந்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி அதை கண்டும் பிடித்துள்ளனர். அவர் வாங்கும் வருமானத்தை இரு ஆவணங்கள் தயாரித்து ஒரு ஆவணத்தில் உண்மையாக இருப்பதை தன்னிடம் வைத்துக்கொண்டும் மற்றொன்றை போலியாக சித்தரித்து வருமான வரித்துறையினரிடன் கொடுத்துள்ளார்.
போலி ஆவணத்தை கண்டுபிடித்த ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் அவருக்கு 46 மில்லியன் டாலர் அபராதமாக இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாயை விதித்து உத்திரவிட்டுள்ளது.
மேலும் டிவி மற்றும் வானொலியில் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நீக்கவும் உத்திரவிட்டுள்ளது.