வாய்ப்பு கிடைத்தும் அங்கீகாரம் கிடைக்காமல் ஒதுக்கப்படும் நடிகைகள்!! குடியால் கெட்ட ரிப்பன் நடிகை
சினிமாவில் ஒருசில நடிகைகள் நடித்த ஒருசில படங்களிலேயே டாப் இடத்தினை பெற்று கொடிக்கட்டி பறந்துவிடுகிறார்கள். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலும் நடித்து சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் நடிகைகளும் இருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்..
பிரியாமணி
அறிமுகமாகி சில காலத்திலேயே பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் டாப் இடத்தினை பெற்றவர் நடிகை பிரியாமணி. அப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இந்தி பக்கம் துறத்தப்பட்டார். தேசிய விருது வாங்கினாலும் தமிழில் போதுமான அங்கீகாரத்தை பெறாமல் வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை நயன் தாராவின் லைன் அப்பை பயன்படுத்தி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர் வடசென்னை, தர்மதுரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக வளராமல் இருக்கிறார். சமீபத்தில் தொடர்ந்து லீட் ரோலில் நடித்து தோல்வியை சந்தித்து வருகிறார்.
சாய் தன்ஷிகா
பேராண்மை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நடிகை சாய் தன்ஷிகா, பரதேசி படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக கபாலி படத்தில் நடித்தும் தனக்கான அங்கீகாரத்தை பெறாமல் அக்கடதேசத்து சினிமாவை நாடி சென்றுவிட்டார்.
அஞ்சலி
தமிழில் அங்காடி தெரு படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகளில் இன்று வரை அவருக்கான இடத்தை பிடிக்கவில்லை. மேலும் ஜெய்யுடன் காதல் கிசுகிசு, உச்சக்கட்ட கிளாமரில் நடித்தும் தோல்வியை சந்தித்து வருகிறார்.
ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரிப்பன் நடிகை என்ற பெயரை எடுத்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்பில்லாமல் சொந்த ஊரில் செட்டிலாகியிருக்கிறார். வாய்ப்பில்லாமல் போக அவர் பார்ட்டியில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதேபோல் பல நடிகைகள் பல ஆண்டுகள் சினிமாவில் அறிமுகமாகி தனக்கான ஒரு அங்கீகாரமோ இடத்தையோ பிடிக்காமல் இருக்கிறார்கள்.