அந்த விசயத்தில் கால்ஷீட் கொடுத்து ஏமாற்றாத நடிகைகள்!!! அதன்மூலம் 5 வாய்ப்பை பெற்ற பவானி சங்கர்..
சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் கமிட்டாகி நடிக்கும் போது சரியான நேரத்திற்கு வராமல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏமாற்றுவார்கள். அதில் நடிகைகள் ஆணவத்தில் ஆடிய சரியான நேரத்திற்கு வராமல் இருப்பது சமீபத்தில் விமர்சனங்களாக எழுந்து வருகிறது. ஆனால் ஒருசில நடிகைகள் சரியான நேரத்திற்கு வந்து பஞ்சுவாலிட்டியை சரியாக செய்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வார்கள். அந்த லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.
சாய் பல்லவி
மலையாள சினிமாவில் மலர் என்ற கதாபாத்திரம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழ் நடிகையாக பிரபலமான சாய் பல்லவி, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சரியான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் அடக்கவுடக்கமான ஆடை, பந்தா இல்லாத பேச்சு என்று அனைவரையும் ஈர்த்து வரும் சாய் பல்லவி ஷூட்டிங் சமயம் என்றால் கால்ஷீட் கொடுத்த நாள், நேரத்திற்கு சரியான டைமிங்கில் வந்துவிடுவாராம். அதனாலேயே தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுக்கிறார்கள்.
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகள் அடக்கவுடக்கமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். எந்த படத்தில் நடித்தாலும் சரியான பஞ்சுவாலிட்டியை சரியாக செய்யக்கூடியவர் என்ற பெருமையை பெற்று வருகிறார். அந்த ஒரு காரணத்திற்காகவே நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது டிமாண்டி காலணி 2, வரிக்குதிரை, இந்தியன் 2, பொம்மை உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
திரிஷா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, 20 வருட சினிமா வாழ்க்கையில் தாமதமாக வருகிறார் என்ற புகாரை சந்தித்ததே இல்லையாம். அப்படி இன்று வரை கொடுத்த கால்ஷீட் நேரத்தினை கடைப்பிடித்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவாராம் நடிகை திரிஷா.
அனுஷ்கா செட்டி
90ஸ் காலத்தில் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அனுஷ்கா செட்டி இன்று வரை டீசண்டான நடிகை என்ற பெயரை எடுத்து வருகிறார். தற்போது வாய்ப்புகள் இல்லையென்றாலும் கமிட்டாகிய படங்களுக்கு சரியான நேரத்திற்கு சென்று நடிக்கக்கூடியவராக திகழ்ந்து வருகிறார்.
வாணி போஜன்
சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை வாணி போஜன் சரியான நேரத்திற்கு வந்து ஷூட்டை முடித்து கொடுப்பாராம். அடக்கவுடக்கமான நடித்து அனைவரையும் ஈர்த்து வரும் வாணி போஜன் இதனால் தான் பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.