சினிமாவே வேண்டவே வேண்டாம் என ஓடிய நடிகைகள்! இந்த நடிகை இந்த லிஸ்ட்லையா?

Laila Nadhiya Indian Actress
By Edward May 10, 2022 05:23 PM GMT
Report

தமிழில் அறிமுகமாகி 80, 90களில் கொடிக்கட்டி கொடிக்கட்டி பறந்து தற்போது வரை நல்ல ஒரு இடத்தினை பிடித்து சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகைகள் ஒருசிலரே. அப்படி தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஒருசில நடிகைகள் வட இந்திய பக்கம் சென்று திருமணம் செய்து கொண்டு அங்கயே செட்டிலும் ஆகிவிடுவார்கள்.

ரீமா சென்

அந்தவரிசையில் இருக்கும் முதல் நடிகை ரீமா சென். மின்னலே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரீமா சென். இதைதொடர்ந்து பகவதி, தூள், செல்லமே, திமிரு வல்லவன் போன்ற பல படங்களில் நடித்தார்.

இவர் ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை 2012ல் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

நடிகை மாளவிகா

அஜித்தின் உன்னைத்தேடி படத்தின் மூலம் அறிமுகமாகி ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின் திருமண செய்து வெளிநாட்டில் செட்டிலாகிய மாளவிகா தற்போது மும்பையில் தங்கி க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருகிறார்.

நடிகை லைலா

தமிழ் சினிமாவில் சிரிப்பழகி என்று பலரால் அறியப்பட்ட நடிகை லைலா. துருதுருவென தன் நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்த நடிகை லைலா 2006 இல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்து பிரசாந்தின் அந்தகன், கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரூபினி

விஜயகாந்துக்கு ஜோடியாக கேப்டன் படத்தில் நடித்தவர் நடிகை ரூபினி. அழகு, இளமை, கவர்ச்சி, நடிப்பு என அனைத்து திறமையும் ஒரு சேர்ந்த ரூபினி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கணவர் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகி தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நவ்யா நாயர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். இவர் தமிழில் அழகிய தீயே, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு நவ்யா நாயர் சினிமாவை விட்டு ஒதுங்கி மீண்டும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

நதியா

க்ளாமரில் ஒருதுளிக்கூட நடிக்காத நடிகை வரிசையில் முன்னணியில் இருப்பவர் நடிகை நதியா. கதாநாயகியாக நடிக்க பல கண்டீஷன்களை போடும் நடிகையாக இருந்தும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தார்.

பின் 1988 இல் சிரில் காட்போல் என்பவரை திருமணம் செய்து சில காலம் விலகி இருந்தார். தற்போது விளம்பரம் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை நதியா.