நடிகையை நம்பி 100 கோடி செலவு! ஆயிரத்துக்கும் உதவாத்தால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்..
முன்னணி நடிகைகளாக இருந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி பெரும் நட்சத்திரங்கள் மத்தியில் பேசுவதெல்லாம் சர்ச்சையாகவே அமையும் அளவிற்கு சர்ச்சை நடிகை என போற்றப்பட்டவர் தான் அம்மணி.
பாலிவுட் வட்டாரத்தில் கஷ்டப்பட்டு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் வலம் வந்தவர் தான் அந்த நடிகை. மொத்தம் 4 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கியிருக்கிறார் அம்மணி.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து உச்சத்தை அடைந்த அம்மணி தன் வாய் கெடும் என்று சொல்வதற்கு இணையாக அவரின் பேச்சுக்கள் எல்லாம் சர்ச்சையில் தான் முடியும்.
இப்படி இருந்த நடிகையை நம்பி கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதையாக அமைஅந்த படத்தினை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர். அதற்காக கிட்டத்தட்ட 100 கோடி அளவில் செலவு செய்தும் பிரமோஷன் செய்தும் வந்திருக்கிறார்.
ஆனால் அம்மணியின் நடிப்பில் படம் வெளியாகி படுமோசமான நிலைக்கு வந்திருக்கிறது. பாலிவுட் படம் என்பதால் முதல் நாளில் 20 கோடியாவது வசூல் பெரும் என்று எதிர்ப்பார்த்திருந்தார் தயாரிப்பாளர்.
சொல்லப்போனால் படம் வெளியாகி ஒரு வாரமாகியும் 4 கோடி அளவில் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. 8 ஆம் நாளில் வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனையாகியிருக்கிறதாம்.
இதனால் தயாரிப்பாளர் நடுத்தெருக்கு வரும் அளவிற்கு நடிகையால் ஏமாற்றமடைந்திருக்கிறாராம். தற்போது பாலிவுட் பக்கம் முழுதும் அம்மணியை கண்டபடி கலாய்த்து வருகிறார்கள். இப்படி தயாரிப்பாளர் புலம்பிட்டு இருக்கும் போது அம்மணி அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம்.