ஒரே படத்தில் முடிந்த சினிமா வாழ்க்கை!! இப்போ ரூ. 45,000 கோடிக்கு அதிபதியான நடிகை..
காயத்ரி ஜோஷி
சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் சிலர் திடீரென திருமணமாகி செட்டிலாகிவிடுவார்கள். அப்படி டாப் நடிகையாக இருந்து திடீரென திருமணம் செய்து செட்டிலாகியவர் தான் நடிகை காயத்ரி ஜோஷி.

மாடலாக வாழ்க்கையை தொடங்கிய காயத்ரி, 2000ல் ஃபெமினா மிஸ் இந்தியா இண்டர்நேஷனல் பட்டத்தை வென்றார். பின் திரைப்படத்துறையில் நடிகையாக நுழைந்த முதல் படமே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.
2004ல் ஸ்வேட்ஸ் என்ற படத்தில் தான் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வெற்றியையும் கண்டார். முதல் படத்தின் மூலம் நடிப்புத்திறனை பார்த்தவர்கள் பெரியளவிற்கு வருவார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடித்த முதல் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

திருமணம்
2005ல் தொழிலதிபரான விகாஸ் ஒபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விகா ஒபராய், ஒரு தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ஒபராய் ரியால்டியை நடத்தி வருகிறார்.

காயத்ரிக்கும் விகாஸுக்கும் விஹான், யுவா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள். மிகுந்த செல்வமிக்க விகாஸ், வெஸ்டின் ஹோட்டல் உட்பட பல புகழ்பெற்ற சொத்துக்களை உருவாக்கினார். அப்படி விகாஸ் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 45,000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.