ஏகே 64 படப்பிடிப்பு எப்போது? எப்படிப்பட்ட படமாக இருக்கும்? வெளிவந்த மாஸ் அப்டேட்
Ajith Kumar
AK 64
By Kathick
அஜித் தற்போது கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். மறுபக்கம் ரசிகர்கள் அனைவரும் எப்போது ஏகே 64 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு குறித்தும், அது எப்படிப்பட்ட படமாக இருக்கும்? என்பதை இயக்குநர் ஆதிக் கூறியுள்ளார்.
இதில், பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ் உள்ளது. ஏகே 64 கண்டிப்பாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படமாக இருக்கும் என ஆதிக் தெரிவித்திருக்கிறார்.