பள்ளியில் படிக்கும் போது அது நடந்துருச்சி, பல பேருடன் ரிலேஷன்ஷிப்..தனுஷ் பட நடிகை ஓபன் டாக்
அருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி பாலன். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 12 -ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை அதிதி பாலன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், " பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். பக்கத்து ஸ்கூல் பையனை காதலித்தேன் அவருடன் பிரேக் ஆகிவிட்டது. அதன் பின் பலருடன் காதல் கொண்டேன். எல்லாமே பிரேக் ஆகிவிட்டது".
"பலருடன் ரிலேஷன்ஷிப் இருந்து பிரேக் ஆகுவதற்கு முக்கிய காரணம் டார்ச்சர் தான். சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்து உள்ளனர். சிலரை நான் டார்ச்சர் செய்த விளைவு தான் இந்த பிரிவுகளுக்கு காரணம்" என்று அதிதி பாலன் கூறியுள்ளார்.