வில்லன் நடிகருடன் ரொமான்ஸ் செய்கிறாரா அதிதி ஷங்கர்.. கோலிவுட்டை கலக்ககும் புது ஜோடி!!

Actors Aditi Shanker Tamil Actors
By Dhiviyarajan Jun 26, 2024 03:30 PM GMT
Report

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் அதிதி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அந்த வகையில் மணிகண்டன் நடித்த குட்நைட், லவ்வர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளாராம்.

மாஸ்டர், கைதி போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், சமீபகாலமாக ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த காம்போ மீதான எதிர்பார்பு அதிகமாகியுள்ளது.

வில்லன் நடிகருடன் ரொமான்ஸ் செய்கிறாரா அதிதி ஷங்கர்.. கோலிவுட்டை கலக்ககும் புது ஜோடி!! | Aditi Shankar Join In Arjun Das Movie