வெளிநாட்டில் தலைவிரித்தாடும் சங்கர் மகள்!! வீடியோவை பார்த்து கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். 2.0 படத்திற்கு பிறகு பிரம்மாண்ட முறையில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.
தற்போது இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். அதேசமயம் தன் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகபடுத்தியும் வைத்தார்.

நடித்த முதல் படமான விருமன் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி அப்படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் லுக்கிலும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
சமீபத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடியிருந்தார் அதிதி. சமீபத்தில் பனிப்பிரதேசத்தில் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பலர் அதிதி சங்கரை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்ள்.