அதிதி முதல் கீர்த்தி வரை!! தமிழ் சினிமாவில் கோலோங்கும் வாரிசு நடிகைகள்..
Keerthy Suresh
Shruti Haasan
Varalaxmi Sarathkumar
Aditi Shankar
Tamil Actress
By Edward
இந்திய சினிமாவில் இருக்கும் அனைத்து மொழி திரையுலகிலும் இருக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகளின் அறிமுகம் அதிகரித்து வருகிறது. அப்படி தமிழில் டாப் நடிகர்களின் வாரிசுகளும் தமிழ் படங்களில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் முதல் அதிதி சங்கர் வரை தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளின் பட்டியல்களை பார்ப்போம்.
- மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின், 2015ல் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
- இயக்குனர் சங்கர் மகளாக இருந்து டாக்டர் படித்து முடித்த அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் நடிகையாகினார்.
- நடிகர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தில் அறிமுகமாகினார்.
- நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தில் அறிமுகமாகினார்.
- இயக்குனர் பிரியதர்ஷன் மற்று நடிகை லிஸ்ஸி என்பவரின் மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி. தற்போது பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
- கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் அறிமுகமாகினார். கமலின் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசன் சமீதாப் படத்தில் அறிமுகமாகி தமிழில் விவேகம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து நடிகையாகினார்.
- நடிகர் சரத்குமார் - சாயா தம்பதிகளுகு பிறந்த வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
- இயக்குனர் அகத்தியன் மகளாக சென்னை 28 படத்தின் மூலம் நடிகையானார் நடிகை விஜயலட்சுமி.
- நடிகை ராதா தன்னுடைய மூத்த மகள் கார்த்திகாவை கோ படத்திலும் இரண்டாம் மகள் துளசி நாயரை கடல் படத்திலும் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
- நடிகரும் இயக்குனருமான ரவிச்சந்திரனின் பேத்தியாக பலே வலையதேவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.