27 வருட சினிமா வாழ்க்கை!! கமலை ஒதுக்கி வைத்த ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு..
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஒரே வருடத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும் அஜித் நடித்த ஒரு படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

ஆனால் 27 வருட சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல் ஹாசனின் படத்தில் நடிக்காமல் ஒதுக்கி வந்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மணிரத்னம் - கமல் கூட்டணி சமீபத்தில் இணைந்துள்ளது. Thug Life படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை திரிஷாவும் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் ஐஸ்ர்யா ராய் இணைந்து இருப்பது பலருக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
You May Like This Video