மன உளைச்சலுக்கு பிறகு ரீஎண்ட்ரி! மார்க்கெட்டே இல்லாத நடிகர் பக்கம் மீண்டும் சென்ற இயக்குநர் பாலா!
தமிழ் சினிமாவில் உடலை வறுத்தி நடிக்க வைக்கும் இயக்கநர் என்ற பெயரை பெற்றவர் இயக்குநர் பாலா. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆதித்ய வர்மா படத்தை ரீமேக் செய்தார். அதில் நடந்த பிரச்சனையால் பல பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டு இயக்குநர் அவதாரத்தை தொடர நடிகர் சூர்யாவை வைத்து படமொன்று எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்று கூறி வருகிறார்கள். இதையடுத்து உதயநிதி - அருள்நிதியை வைத்து எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், பாலா தான் பணியாற்றிய நடிகர்களை சந்தித்துள்ளாராம். அதுவும் மாஸ் நடிகரின் கதை என்பதால் சூர்யாவை வைத்து எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளராம்.
ஆனால் அதற்கு முன் நடிகர் அதர்வாவை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார் பாலா. அப்படத்தினை முழுக்க முழுக்க ஓடிடி தளத்தில் வெளியிடப்போவதாகவும் அதை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இடைவேளைக்கு பிறகு பாலாவின் இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.