விவாகரத்துக்கு பின் குஷியாக இருக்கும் ஐஸ்வர்யா, அல்லோலப்படும் தனுஷ்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Kathick Jan 08, 2023 04:44 AM GMT
Report

கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை.

விவாகரத்துக்கு பின் தன்னுடைய இயக்குனர் வேளையில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா, தனது அப்பா ரஜினிகாந்தின் சிபாரிசின் மூலம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லால் சலாம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியும் நடிக்கிறார். இதனால் செம குஷியாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா.

ஆனால், நடிகர் தனுஷ் சற்று கவலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷ் நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படம் வாத்தி. இப்படம் வெளியவிருந்த சமயத்தில் அவதார் 2 வெளியானது. இதனால் வாத்தி படத்தின் வசூல் அடிவாங்கும் என்று எண்ணி ரிலீஸ் தேதியை மாற்றினார்கள். இதனால் தனுஷ் சற்று அப்செட் ஆனாராம்.

வருகிற பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாதமும் இப்படம் வெளியாகாது. அதிலிருந்து சற்று தள்ளிப்போய், வருகிற ஏப்ரல் மாதம் தான் வாத்தி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இதனால் தனுஷ் எப்போது தான் தன்னுடைய வாத்தி படம் வெளியாகும் என அல்லோலப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.