சாண்டியை விவாகரத்து செய்தப்பின் வேறொருவரை காதலித்தேன்?.. உண்மையை கூறிய காஜல்
2005ல் வெளியான சிந்துபாத் சீரியல் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இதனைதொடர்ந்து கஸ்தூரி, அரசி, மானாடா மயிலாட நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் நடித்து வந்தார். வெள்ளித்திரையில் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம், இதயதிருடன், டிஸ்யூம், பெருமாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
அதன்பின் மாயை, அதிதி, இரும்புத்திரை, கோ, பழைய வண்ணாரம்ப்பேட்டை, கலகலப்பு 2, ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நடன இயக்குனர் சேண்டியுடன் காதல் ஏற்பட்டு 2008ல் திருமணம் செய்து கொண்ட காஜல் பசுபதி நான்கே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு காரணம் என்னுடைய காதல் டார்ச்சர் தான் சேண்டி பிரிந்தார் என்று அவரே கூறியிருந்தார். இதனை அடுத்து சாண்டி, சில்வியா என்பவரை 2017ல் திருமணம் செய்து சுசன்னா என்ற பெண் குழந்தையையும் பெற்றார்.
காஜல் பேட்டி
இந்நிலையில் சாண்டி பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார் காஜல். சாண்டி தற்போது என்னுடைய நெருங்க நண்பராக இருக்கிறார் என்றும் சாண்டிக்கு பின் இன்னொருவரை காதலித்தேன். ஆனால் திருமணம் வரை சென்றது. பின் அதுவும் ஒரு பிரச்சனையாகி, என் மேல் தப்பு சொல்லியதால் அது செட்டாகாது என்று தனிமையில் வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். 4 வருடத்திற்கு முன் என்னை எப்போது கைநீட்டினானோ அதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன்.
மேலும் சாண்டியின் மகள் லா லா என்னை மறந்துவிட்டாள். நான் இன்னும் சாண்டியை நினைத்திருக்கிறேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாண்டி என்னை ஆண்டி என்று மகளிடம் கூறியது கோபப்பட்டேன், அக்கான்னு கூப்பிட சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
இணையத்தில் சாண்டி குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் உட்பட பலர் அசிங்கமாக கமெண்ட் செய்பவர்களை பிளாக் செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.