வலிமைக்கு காய்ச்சல் அடிக்காம பாத்துக்கோங்க போனி! இன்னும் நாளு நாள் தான் இருக்காம்.,,,

ajith valimai hvinoth boneykapoor
By Edward Feb 20, 2022 10:30 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தினை தன் தயாரிப்பில் சாதாரண அளவில் பிரமோஷன் செய்து வருகிறார் போனி கபூர். படம் ரிலீஸ் ஆகும் முன்பே அஜித்குமாரின் அடுத்த படத்தினை தயாரிக்கும் அறிவுப்பை அறிவித்துள்ளார்.

வலிமை வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் முன்பதிவி ஆரம்பித்து இப்போது வரை சுமார் 204 இடங்களில் காட்சிகள் ஃபுல் ஆகிவுள்ளது. 1.84 கோடி ரூபாய் அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 61 இடங்களில் மிக வேகமாக டிக்கெட்டுகள் விற்று தீருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் இருக்கக்கூடிய நிலையில் இப்போதே வலிமை காய்ச்சல் அஜித் ரசிகர்களுக்கு மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்து இருக்கிறது.

இந்நேரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்று முடியும் வரை கொரோனா குறித்து வாய் திறக்காத தமிழக அரசு தற்போது கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் எதுவும் அறிவித்தால் என்ன ஆகும் என்று சினிமா வட்டாரத்தில் புலம்பி வருகிறார்கள்.