ஜெய்லர் 2-வோட சினிமாவிற்கு டாட்டா சொல்கிறாரா ரஜினி? பதட்டத்தில் இருந்த ரஜினி ரசிகர்களுக்கு வந்த உண்மை தகவல்
Rajinikanth
Jailer
By Tony
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவே 50 வருடமாக கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் ரஜினிகாந்த் தான். இன்றும் ரூ 600 கோடி வசூல் கொடுத்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடுகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது லோகேஷின் கூலி, நெல்சனின் ஜெய்லர் 2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இதில் கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவருவதாக கூறிவிட்டனர், இதை தொடர்ந்து ஜெய்லர் 2 அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய விவாதமே ஜெய்லர் 2 பிறகு ரஜினி நடிப்பாரா என்று தான், பலரும் ரஜினியின் கடைசி படம் ஜெய்லர் 2 தான் என்று பேசி வந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், லதா ரஜினிகாந்த் கண்டிப்பாக ரஜினி ஜெய்லர் 2 பிறகும் நடிப்பார், ரசிகர்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.