ஹவுஸ்மேட்டின் டார்ச்சர்! பிக்பாஸ் வீட்டைவிட்டு ஓடிய வனிதா! இதுதான் காரணம்?

simbu vanitha julie kamalhaasan niroop walkout bbultimate biggbossultimate வனிதா
By Edward Feb 23, 2022 04:30 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்தவாரம் கமல்ஹாசனால் ஷாரிக், அபிநய் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு விலகினார்கள். இதையடுத்து தன்னுடைய படங்களின் கால்ஷீ பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியால் பாதிப்படைகிறது என்று கூறி நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

அடுத்து யார் தொகுத்து வழங்குவது என்று கேள்வி எழுந்து வரும் சூழலில் நடிகர் சிம்பு தான் அடுத்து தொகுப்பாளர் என்றும் கூறப்படுகிறது. வனிதாவும் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டார் என்று செய்தியும் பரவி வருகிறது. சில நாட்களாகவே மனதளவில் கஷ்டத்தோடு கத்தி வரும் வனிதா சக போட்டியாளர்களுடன் கடுமையாக சண்டைகள் போட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் வந்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று பல முறை பிக்பாஸிடம் புலம்பி கதறி அழுதுள்ளார். ஒருகட்டத்தில் வீட்டின் கதவை உடைக்க சென்றுள்ளா வனிதா. பிக்பாஸ் விதிகளை மீறியதாலும் வனிதா வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இப்போது வெளியே சென்று வீடியோக்களை பார்த்து விட்டு வைல்ட் கார்டில் ரீஎண்ட்ரி கொடுக்க வைப்பார்களோ என்ற தகவலும் வெளியாகியுள்ளது.